வைகோ நூல் வெளியீட்டு விழா: டெல்லியில் ஒரே மேடையில் சிபி ராதாகிருஷ்ணன், விஜய்

Published On:

| By Mathi

Vaiko Book Launch: CP Radhakrishnan and Vijay on the Same Stage

”தமது நாடாளுமன்ற உரைகள் அடங்கிய நூல்களை டெல்லியில் நடைபெறும் விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட தமிழக முதல்வர் விஜய் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் நடைபெறுவதாக” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் விஜய்யை இன்று ஜூன் 17-ந் தேதி சந்தித்த வைகோ, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய்யிடம் (Vijay) 45 நிமிடங்கள் பேசினேன். 30 ஆண்டுகாலமாக நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை ஆறு பகுதிகளாக நான் தொகுத்திருக்கிறேன். அந்தத் தொகுதிகளை வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று டெல்லியில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்.

ADVERTISEMENT

அந்த விழாவிலே, நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ள வேண்டும்; அந்த புத்தகத்தின் முதல் பிரதியை, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். அவரிடம் அனுமதி கேட்க வேண்டும். நம்முடைய முதலமைச்சர் விஜய் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் ஒப்புதல் தந்திருக்கிறார். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share