தலைமை நீதிபதியை சந்தித்த முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

தலைமை நீதிபதி தர்மாதிகாரியை முதல்வர் விஜய் இன்று (ஜூன் 17) சந்தித்து பேசினார்.

முதல்வர் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து அவரை பலரும் நேரில் சந்தித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று தலைமை செயலகத்தில் பணிகளை முடித்துக்கொண்டு கலைவாணர் அரங்கத்துக்கு சென்ற முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு வந்த புத்தாக்க பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தொடர்ந்து அங்கிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு சென்ற அவர் நடிகை சமந்தா உள்ளிட்டோரை சந்தித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டுக்குச் சென்றார்.

அங்கு தலைமை நீதிபதியுடன் சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளார்.

ADVERTISEMENT

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share