சென்னை பாஜக தலைமையகம் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ‘அம்பேத்கரின் 125 பிறந்தநாள் நூற்றாண்டை இந்தாண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களின் பாதுகாவலர் என்று சொல்லிக்கொள்பவர்கள், ‘அடங்க மறு, திருப்பி அடி’ என்கிறார்கள். இவர்களால் எப்படி தாழ்த்தப்பட்டவர்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், நாங்கள் ‘அடங்க மறு, திருப்பி படி’ என்று கூறி படிக்க வைக்கிறோம். முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்துக்குச் செல்லும்வழியில் ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் விதிமீறல்களைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது’ என்று கூறினார்.
‘அடங்க மறு, திருப்பி படி’ என்கிறோம்: தமிழிசை
By Balaji
|
Published on 15 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








