முகவரி கொடுத்த தெய்வமா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls august 18

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த டிவில, ‘வீடு இல்லாம மேம்பாலத்துக்கு கீழே தங்கி இருந்தவங்களுக்கு அட்ரஸ் தெரியல. அதான் 0னு அட்ரஸ் நம்பர் போட்டோம்’னு தேர்தல் ஆணையர் சொன்னதா நியூஸ் போயிட்டு இருந்துச்சி..

அத பாத்துக்குட்டு இருந்த நண்பர்… “ம் பாத்தியா.. எங்க ஜி ஆட்சில முகவரி இல்லாதவங்களுக்கும் எப்படி முகவரி ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க பாரு… அவரு முகவரி கொடுத்த தெய்வம்… சும்மா எப்பா பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்க கூடாது”னு ரொம்ப ஆக்ரோசமா பேசுனாரு.

ADVERTISEMENT

அதக் கேட்டுக்கிட்டு இருந்த பெரியவரு, “எதே தெய்வமா? அடேய் முகவரி இல்லாதவங்களுக்கு மட்டுமில்ல… உசுரே இல்லாதவங்களுக்கு கூட 0னு முகவரி கொடுத்துருக்காங்க… இன்னும் கொஞ்ச மாசத்துல தேர்தல் ஆணையம் நம்மோட உசுரும் இருக்கா, இல்லையானு சொல்லிரும்”னு ரிவீட் கொடுத்து நண்பர் ஆஃப் ஆயிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தமிழனை துணை குடியரசு தலைவராக்கிருக்கோம் – பாஜக

இதென்ன பிரமாதம், அடுத்த மாசம் குஷ்புவை தமிழ்நாடு ஆளுநர் ஆக்குவாங்க..

ADVERTISEMENT

✒️Writer SJB✒️

மீ : சார் லோன் வேணும்

உங்க பேரு?

மீ : asffghj

உங்க அப்பா பேரு?

மீ : klzxcvb

டோர் நம்பர் அட்ரஸ் ?

மீ : டோர் நம்பர் 0

யோவ் உனக்கு எல்லாம் லோன் தர முடியாது எந்திரிச்சு போயா,

மீ : ஏங்க சென்ரல் கவர்மெண்ட் எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையே கொடுக்குது நீங்க லோன் தர மாட்டீங்களா?

✒️Writer SJB✒️

வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த வந்த பெண்களின் வீடியோ எல்லாம் அவர்கள் அனுமதி இல்லாமல் எதிர்க்கட்சி தலைவருக்கு கொடுக்க முடியாது -தேர்தல் கமிஷனர்

அங்க சிசிடிவி கேமரா வைக்கிறதுக்கு முன்னாடி அந்த பெண் வாக்காளர்களிடம் நீங்க அனுமதி வாங்கினீங்களா???

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

டாய்லெட்டுக்கு மொபைல் போனை கொண்டு செல்லாமல் விட்டால்,

மல சிக்கல் மட்டுமல்ல பல சிக்கல்கள் வராமல் காக்கலாம்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நானும் ஒவ்வொரு மாசமும் வெயிட் குறைச்சுட்டு தான் இருக்கேன், ஆனாலும் மாசக்கடைசில திரும்ப ஏறிருது மாமா..

என்ன மாப்ள சொல்லற..? நிஜமாவா..?

அட ஆமா மாமா.. முடி வெட்டிட்டு வந்து செக் பண்ணா 100 கிராம் குறைஞ்சுருக்கு, முடி வளர்ந்ததும் திரும்ப பழைய வெயிட் வந்துறேன் மாமா..

R.Saravanan (R.Saran)

நம்மையெல்லாம் கூலிப்படை ரேஞ்சுக்கு, “வில்லன் சைமன் ஈஸியா பொணங்களை கல்லைக் கட்டி கடல்ல போட்ருக்கலாமே…எதுக்கு எரிச்சிக்கிட்டு?” என்று ரொம்ப சகஜமாக பேச வைத்த பெருமை லோகேஷ் கனகராஜையே சேரும்.🧐😈😂

update kumaru memes and trolls august 18

செங்காந்தள்

தமிழக வளர்ச்சி குஜராத், பிஹாரைவிட பின்தங்கி உள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து

அதனால் தான் தமிழகத்தை முன்னேற்ற அங்கிருந்து இங்கே வந்து உழைக்கிறார்களோ?

💙SuGaNyA❤️💙👰🏼‍♂️🙊

சலூன் கடைக்காரரும் கறிக்கடைக்காரரும் தலையில் தான் வெட்டுகிறார்கள் ஆனால் ஒரு நாளும் போலீஸ்ல மாட்டினது இல்ல..!

▶படிக்காதவன்™✍

கேப்ல ஆதிக் ரவிச்சந்திரன் தான் பெஸ்ட் டைரக்டர்னு யாரும் சொல்லாத வரைக்கும் சந்தோஷம்தான்…

✒️Writer SJB✒️

தமிழ் மண்ணில் இருந்து துணை ஜனாதிபதி ஆக போறீங்க தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்யப் போறீங்க ?

தமிழ் மண்ணில் இருந்து ஒன்றிய அமைச்சரான L.முருகன் ரெண்டு மாநில கவர்னரான தமிழிசை தமிழ் மக்களுக்கு என்ன செஞ்சாங்க ?

ஒண்ணுமே செய்யல,

அதே தான் நானும்..!

செங்காந்தள்

பொது விடுமுறைக்கு அடுத்த நாளை திங்கட்கிழமை என்று நினைப்பதை தவிர்க்க முடிவதில்லை…!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஆபிஸ்லயோ வீட்லயோ வேலை மேல வேலை சொல்லி உயிரை எடுக்கும் போது கூட, பெருசா எதுவும் தெரியாது..

ஆனா, ’இந்த வேலையை உன்னை விட நல்லா யாராலும் செய்ய முடியாது’ன்னு சொல்லுவாங்க பாருங்க, அப்ப தான் சந்தேகமே வரும்..

💫Shahtweetz💫🇮🇳

She : உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு போகாதிங்க..

My mind voice : அப்படி நான் வீட்டுக்கே வர கூடாது டி வெண்ண மவளே 😁🙄😒😷😂🤣

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share