மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானம்: “திருத்த” கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்.. உதயநிதி ஸ்டாலின் ”மகிழ்ச்சி”!

Published On:

| By Mathi

Udhayanidhi expresses satisfaction as CM Vijay agrees to revise Mekedatu resolution

தமிழ்நாடு சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தீர்மானத்தில் தாம் அளித்த திருத்தத்தை ஏற்று முதல்வர் விஜய் இணைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,

இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

ADVERTISEMENT

நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்! இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share