தேர்தல் முடிந்தவுடன் வெளிநாடு பறந்த உதயநிதி

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ADVERTISEMENT

நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் தனது தொகுதியான திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பணி நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க வெளியூருக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்கிறார்.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.

ADVERTISEMENT

நேற்று குடும்பத்தினருடன் சென்று வாக்களித்திருந்தார் துணை முதல்வர் உதயநிதி. அப்போது பேசிய அவரது மனைவி கிருத்திகா, நான் கடந்த 25 ஆண்டுகளாக வாக்களிக்கிறேன். எனது மகன் முதல் முறையாக வாக்களிக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share