கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் செல்ல உள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ADVERTISEMENT

தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினருக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தற்போது தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், கொடைக்கானல் செல்லவிருக்கிறார்.

ADVERTISEMENT

நாளை குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்ல இருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று தினங்கள் அங்கு தங்கும் முதல்வர் மீண்டும் சென்னை திரும்புவார் எனவும் தகவல்கள் வருகின்றன.

இதற்கிடையே திமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தேர்தல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை செய்துள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கனவே 2024 ஏப்ரல் இறுதியில் குடும்பத்தினருடன் முதல்வர் கொடைக்கானல் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share