தமிழ்நாட்டின் 17-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
தமிழகத் தேர்தலில், மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இறுதியாக அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடி.
பதிவான வாக்கு சதவீதம் 85.15%
அதாவது வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 4.88 கோடி.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 4.63 கோடி.
2021-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 2026-ம் ஆண்டு சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது, கடந்த தேர்தலைவிட ’கூடுதலான வாக்காளர்கள்’ இம்முறை வாக்களித்துள்ளனர் என தோன்றும்.
ஆனால் ‘கூடுதலான வாக்காளர்கள்’ என்பதே கடந்த 5 தேர்தல்களை ஒப்பிடுகையில் ‘குறைவான- கூடுதலான வாக்காளர்கள்’ என்பது தெரியவரும்.
2006-ம் ஆண்டு தேர்தலில் 52 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்தனர்
2011 தேர்தலில் 2006-ம் ஆண்டை விட கூடுதலாக 27 லட்சம் வாக்களித்திருந்தனர்.
2016 தேர்தலில் 2011-ம் ஆண்டை விட கூடுதலாக 66 லட்சம் பேர் வாக்களித்தனர்.
2021 தேர்தலில் 2016-ம் ஆண்டை விட கூடுதலாக 37 லட்சம் பேர் வாக்களித்தனர்.
ஆனால் 2026 தேர்தலில் 2021-ம் ஆண்டை விட கூடுதலாக 25 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகமாக அளவில் கூடுதலான வாக்காளர்கள் வாக்களிப்பது வழக்கம்.
இந்த தேர்தலில் குறைவான அளவில் கூடுதலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பதுதான் புள்ளி விவரங்கள் காட்டுகிற உண்மை.
