தமிழக சட்டசபை தேர்தல் 2026: எத்தனை மாவட்டங்களில் 80%, 90% வாக்குகள் பதிவாகின? குறைவான வாக்கு சதவீதம் எங்கே?

Published On:

| By Mathi

TN Voters Trunout

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கரூர் உட்பட 4 மாவட்டங்களில் 90%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றுடன் மொத்தம் 33 மாவட்டங்களில் 80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று ஏப்ரல் 23-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த தேர்தலில் மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

33 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

ADVERTISEMENT

80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவு விவரம்:

  1. கரூர் – 92.64%
  2. சேலம் – 90.73%
  3. தருமபுரி – 90.14%
  4. நாமக்கல் – 90.13%
  5. ஈரோடு – 90.10%
  6. ராணிப்பேட்டை – 89.869%
  7. திருவண்ணாமலை – 89.46%
  8. விழுப்புரம் – 88.99%
  9. திருப்பத்தூர் – 88.96%
  10. திண்டுக்கல் – 89.06%
  11. வேலூர் – 88.76%
  12. திருப்பூர் – 88.59%
  13. கள்ளக்குறிச்சி – 88.25%
  14. அரியலூர் – 87.40%
  15. காஞ்சிபுரம் – 87.39%
  16. நாகை – 86.30%
  17. பெரம்பலூர் – 85.50%
  18. கடலூர் – 85.49%
  19. திருச்சி – 85.44%
  20. கிருஷ்ணகிரி – 85.29%
  21. செங்கல்பட்டு – 85.29%
  22. விருதுநகர் – 84.90%
  23. கோவை – 84.79%
  24. புதுக்கோட்டை – 83.89%
  25. திருவாரூர் – 83.77%
  26. திருவள்ளூர் – 83.76%
  27. சென்னை – 83.73%
  28. தென்காசி – 82.40%
  29. மயிலாடுதுறை – 82.14%
  30. தேனி – 81.92%
  31. தஞ்சாவூர் – 80.61%
  32. மதுரை – 80.55%
  33. தூத்துக்குடி – 80.55%

குறைவான வாக்குப் பதிவு மாவட்டங்கள்

  • நீலகிரி – 78.95%
  • திருநெல்வேலி – 77.93%
  • ராமநாதபுரம் – 77.03%
  • சிவகங்கை – 76.61%
  • கன்னியாகுமரி – 75.61%
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share