Tamil Nadu Election 2026: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது

Published On:

| By Pandeeswari Gurusamy

eci release final voter turnout as 69.72% in Tamil Nadu

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு சற்றுமுன் நிறைவடைந்தது.

மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலை முன்னிட்டு, தமிழகமெங்கும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்பாகவே சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் அஜித் குமார் தனது வாக்கை தமிழகத்தின் முதல் ஆளாக வாக்கு பதிவு செய்தார்.

மாலை 5.00 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
5 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 5,73,43,291 வாக்காளர்களில் 4,71,60,321 பேர் வாக்களித்துள்ளனர். தொடர்ந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதால், இறுதி வாக்குப்பதிவு சதவீதம் இன்றும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்த போது வாக்குச்சாவடிகளில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

குறிப்பாக, கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது இந்த முறை அதிகளவில் வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share