சென்னையில் இரு நாள்களுக்கு மழை!

By Balaji

|

Published on 18 Dec 2017, 12:00 AM

$சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழையின் தாக்கத்தையடுத்து தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 19) முதல் 21ஆம் தேதி வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் மெதுமெதுவாக மேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தால் கிழக்கு நோக்கி வீசும் காற்று வலுப்பெற்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

வானிலை ஆய்வாளர் நேற்று, “சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 19 அன்று மேகமூட்டத்துடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மழையின் காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் 177.4 மிமீ உள்ள மாத சராசரி மழை, இந்த மாதத்தில் இதுவரை 66 மிமீ பதிவாகியுள்ளது. இந்த மழைக்காலம் முடிவுற இன்னும் சில நாள்கள் இருப்பதால், விரைவில் சராசரி இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாலான வடகிழக்கு பருவமழை காலங்களில் ஓரளவுக்குச் சராசரியான மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையாலான தென்மேற்கு பருவ மழைக் காலங்களில் மழை குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக 31% அதிக மழை பதிவாகியுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel