கோவில்பட்டியில் வைகோ போட்டியிடும் பின்னணி

By Balaji

|

Published on 16 Apr 2016, 12:00 AM

சென்னை அண்ணாநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றுசொல்லியிருந்த வைகோ, தற்போது கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வைகோ கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து பட்டாசு வெடித்துக்கொண்டாடினர். முன்னதாக கூட்டத்தில் பேசிய வைகோ, எந்தச் சூழ்நிலையிலும் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை. ஆனால், அண்ணன் கலைஞரைப் பற்றி நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதே என்பதற்காகத் தான் மன்னிப்பு கேட்டேன்” என்றார்.

கோவில்பட்டித் தொகுதியில் நாயுடு இன வாக்குகள்தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடியது. வைகோ நாயுடு இனத்தவர். விஜயகாந்தும் நாயுடு இனத்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இந்தத் தொகுதியில் குறிப்பிடத்தக்க ஓட்டு உள்ளது என்பது இந்தத் தொகுதியின் பின்னணி. கோவில்பட்டியில் அதிமுக சார்பாக ராமானுஜம் கணேசும், திமுக சார்பாக ஒன்றியச் செயலாளர் அ.சுப்ரமணியனும் போட்டியிடுகின்றனர்.,”

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel