திருவிக நகர் தொகுதியில் தவெக வெற்றி

Published On:

| By Pandeeswari Gurusamy

Pallavi

திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.ஆர். பல்லவி வெற்றி பெற்றுள்ளார்.

திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், அதிமுக சார்பில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்.ஆர்.பல்லவி நாம் தமிழர் சார்பில் ஜெகதீஸ் சந்தர் ஆகியோர் களம் கண்டனர்.

ADVERTISEMENT

திருவிக நகர் தொகுதியில் கடந்த 2011-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் அ.தி.மு.க-வின் V.நீலகண்டன் வெற்றி பெற்றார். பின்னர் 2016-ல் தி.மு.க-வின் தாயகம் கவி 3,322 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மீண்டும் இத்தொகுதியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தாயகம் கவி 81,727 வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க வேட்பாளரை 55,013 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி வெற்றி பெற்றுள்ளார். 22,333வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share