குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கே.எம் ராஜு, அதிமுக சார்பில் ராமு, தமிழக வெற்றி கழகம் சார்பில் தங்கராஜ், நாம் தமிழர் சார்பில் தீனு ஆகியோர் களம் கண்டனர்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமச்சந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி. வினோத்தை 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2011 திமுக 2016 அதிமுக, என மாறி மாறி இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளரான ராமு 2016 இல் இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் 8099 வாக்குகள் வித்தியாசத்தில் கே.எம் ராஜு வெற்றி பெற்றுள்ளார்.
