வால்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது வரை மூன்று தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதில் வால்பாறை தொகுதியில் திமுக வேட்பாளர் குட்டி என்கிற சுதாகர் வெற்றி பெற்றுள்ளார்.
9371 வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஸ்ரீதரன் தோல்வியடைந்துள்ளார்.
இந்த தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
