தமிழக சட்டசபை தேர்தலில் 24 தனித் தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் (TVK), இவர்களில் 6 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 46 சட்டசபை தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கு அதாவது தனித் தொகுதிகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 46-ல் ஏற்காடு, சேந்தமங்கலம் தொகுதிகள் பழங்குடிகளுக்கானது.
46 தனித் தொகுதிகளில்
- 24 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது.
- 8 தொகுதிகளில் திமுக, 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
- காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் ஆகிய 2 தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது.
- திருத்துறைப்பூண்டியில் சிபிஐ, கீழ்வேளூரில் சிபிஎம் வென்றன.
1. தமிழக வெற்றிக் கழகம் (தவெக / TVK) – மொத்தம்: 21
| தொகுதி பெயர் | வென்றவர் |
| பொன்னேரி | ரவி எம் எஸ் |
| பூந்தமல்லி | பிரகாசம் ஆர் |
| திரு. வி. க. நகர் | எம் ஆர் பல்லவி |
| எழும்பூர் | ராஜ்மோகன் |
| திருப்பெரும்புதூர் | தென்னரசு கே |
| அரக்கோணம் | வி காந்திராஜ் |
| கீழ்வைத்தியனான்குப்பம் | தென்றல் குமார் இ |
| குடியாத்தம் | கே சிந்து |
| ஊத்தங்கரை | என் இளையராஜா |
| கள்ளக்குறிச்சி | அருள் விக்னேஷ் சி |
| இராசிபுரம் | லோகேஷ் தமிழ்ச்செல்வன் டி |
| சேந்தமங்கலம் | பி சந்திரசேகர் |
| பவானிசாகர் | விபி தமிழ்ச்செல்வி |
| அவினாசி | கம்லி எஸ் |
| நிலக்கோட்டை | அய்யனார் ஆர் |
| கிருஷ்ணராயபுரம் | சத்யா எம் |
| துறையூர் | ரவிசங்கர் எம் |
| பெரம்பலூர் | சிவகுமார் கே |
| கந்தர்வக்கோட்டை | என் சுப்பிரமணியன் |
| மானாமதுரை | இளங்கோவன் டி |
| சோழவந்தான் | கருப்பையா எம் வி |
| பெரியகுளம் | சபரி ஐயங்கரன் ஜி |
| திருவில்லிபுத்தூர் | கார்த்திக் ஏ |
| ஓட்டப்பிடாரம் | பி மதன்ராஜா |
2. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக / AIADMK) – மொத்தம்: 10
| தொகுதி பெயர் | வென்றவர் |
| செய்யூர் | ராஜசேகர் இ |
| மதுராந்தகம் | மரகதம் குமரவேல் கே |
| அரூர் | சம்பத்குமார் வி |
| செங்கம் | எஸ் வேலு |
| கெங்கவல்லி | நல்லதம்பி ஏ |
| ஆத்தூர் (சேலம்) | ஜெயசங்கரன் ஏ பி |
| ஏற்காடு | உஷாராணி பி |
| தாராபுரம் | சத்யாபாமா பி |
| வால்பாறை | குட்டி (என்ற) சுதாகர் ஏ |
| சங்கரன்கோவில் | திலீபன் ஜெய்சங்கர் |
3. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக / DMK) – மொத்தம்: 8
| தொகுதி பெயர் | வென்றவர் |
| வந்தவாசி | அம்பேத்குமார் எஸ் |
| வானூர் | கௌதம் டி |
| கூடலூர் | திராவிடமணி எம் |
| திட்டக்குடி | கணேசன் சி வி |
| சீர்காழி | செந்தில்செல்வன் ஆர் |
| திருவிடைமருதூர் | கோவி செழியன் |
| பரமக்குடி | கதிரவன் கே கே |
| வாசுதேவநல்லூர் | ஈ ராஜா |
4. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக / VCK) – மொத்தம்: 2
| தொகுதி பெயர் | வென்றவர் |
| திண்டிவனம் | வன்னி அரசு |
| காட்டுமன்னார்கோயில் | எல் இ ஜோதிமணி |
5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம் / CPI-M) – மொத்தம்: 1
| தொகுதி பெயர் | வென்றவர் |
| கீழ்வேளூர் | லதா டி |
6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ / CPI) – மொத்தம்: 1
| தொகுதி பெயர் | வென்றவர் |
| திருத்துறைப்பூண்டி | மாரிமுத்து க |
24 பட்டியல் இன தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, மொத்தம் 6 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது.
முதல்வர் விஜய் (CM Vijay) தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தவெக பட்டியல் சமூக அமைச்சர்கள் விவரம்:
1. ராஜ்மோகன் (எழும்பூர்)
2. லோகேஷ் (ராசிபுரம்)
3. மதன்குமார் (ஒட்டப்பிடாரம்)
4. கமலி (அவிநாசி)
5. காந்திராஜ் (அரக்கோணம்)
6. தென்னரசு (ஶ்ரீபெரும்புதூர்)
இவர்களுடன் மேலூர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பட்டியல் சமுகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் விஸ்வநாதனும் அமைச்சராகி உள்ளார்.
