’இன்னோவா கார்’ கொடுங்க.. ’கார் இல்லாததால் காதல் தோல்வி’.. தவெக எம்.எல்.ஏ.க்கள் பேச்சு

Published On:

| By Mathi

TVK MLAs

தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்னோவா கார் வழங்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏ. சண்முகம் கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 19) 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், “அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார், வாகன படி, உதவியாளர் படி வழங்கப்படும்” என அறிவித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சண்முகம், “கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கிற உறுப்பினர்கள் சொல்கின்றனர்” என பேச சபையில் முதல்வர் விஜய், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பேசும் போது, “நான் கல்லூரி படிக்கும் போது காதல் தோல்வி.. வேலையும் இல்லை.. காரும் இல்லை.. இன்னைக்கு வேலையும் கொடுத்திருக்கிறார் தலைவர்.. காரும் கொடுத்திருக்கிறார்.. ரொம்ப ரொம்ப நன்றி.. ஏன்னா நான் டிரெயின்லதா வர்றேன்.. இங்கே உள்ளே ஆட்டோவில வர்றேன்.. உள்ளே வரும் போது எல்லாம் பணியில் இருக்கிற காவலர்கள், “நீங்க யார்? என கேட்பாங்க”, நான் எம்.எல்.ஏ.ன்னு சொல்வேன்.. ஐடி கார்டு எல்லாம் எடுத்து காண்பிச்சாலும் நம்பமாட்டாங்க ..” என்றார்.

ADVERTISEMENT

சபரி ஐங்கரன் எம்.எல்.ஏ. இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது, முதல்வர் விஜய் பின்னால் திரும்பி அவர் பேசுவதை சிரித்தபடியே கவனித்துக் கொண்டிருந்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share