கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில்,அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
முதல்வர் விஜய் அவர்களே Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!” என தெரிவித்துள்ளார்.








