கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது

By Mathi

|

Published on 27 Nov 2026, 6:17 PM

Kallakurichi Arul Vignesh

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.திரிசூலி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், காவல்துறை விசாரணை தொடர்பாக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இதனிடையே நவம்பர் 23-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், அருள் விக்னேஷ் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார். ஐஜி காமினி மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

நவம்பர் 25-ந் தேதி அருள் விக்னேஷின் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரிடம் சம்மன் வழங்கினார்.

ADVERTISEMENT

இதனிடையே கள்ளக்குறிச்சியில் விசாரணையைத் தொடங்கிய ஸ்ருஷ்டி சிங், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். நவம்பர் 26-ந் தேதி மாவட்ட நீதிபதியிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் அளித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பாக சாட்சிகளிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டதால் அவர் மீது எப்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) அருள் விக்னேஷின் வீட்டுக்கு விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் நேரில் சென்றார். அங்கு அருள் விக்னேஷிடம் தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் முடிவில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் மாவட்ட ஆட்சியரின் பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel