ஒரு வழியா கைது பண்ணிட்டாங்க: அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து கனிமொழி

By Kavi

|

Published on 27 Nov 2026, 8:46 PM

“ஒரு வழியா அது நடந்துடுச்சு” என்று தமிழக வெற்றி கழக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்தது குறித்து திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக முதன் முதலில், தனது எக்ஸ் பக்கத்தில் கனிமொழி பதிவு செய்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த பதிவை தொடர்ந்து தான் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர் திரிசூலி அருள் விக்னேஷுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் பெண் அதிகாரியின் புகார் மீது விரைவான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கனிமொழி எம்பி, “ஒரு வழியாக அது நடந்துடுச்சு. அவரைக் கைது செய்யப் புவித்தட்டுகள் நகர வேண்டும் அல்லது ஏலியன்கள் வர வேண்டும் என இவர்கள் காத்திருக்கிறார்களோ என்றுகூட நான் நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel