மத்திய அரசின் புதிய மசோதா: தமிழகத்தில் எத்தனை மக்களவை, சட்டசபைத் தொகுதிகள்?

By Mathi

|

Published on 28 Nov 2026, 12:16 AM

Delimitation Bill 2026- Tamil Nadu

மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க வகை செய்யும் மத்திய அரசின் புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவின்படி, தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆகவும், சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 234-ல் இருந்து 351 ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மத்திய அமைச்சரவை நவம்பர் 27-ந் தேதி ஒப்புதல் அளித்த 132-வது அரசியல் சாசனத் திருத்த மசோதாவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் 59 மக்களவைத் தொகுதிகள்?

தற்போது தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 50% அதிகரிக்கும்போது 58.5 ஆகிறது. எனவே தமிழகத்துக்கு கூடுதலாக 20 மக்களவைத் தொகுதிகள் கிடைத்து, மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

351 சட்டசபைத் தொகுதிகள்

தமிழகத்தில் தற்போது 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. புதிய மசோதாவின்படி 50% அதிகரிக்கப்பட்டால், கூடுதலாக 117 சட்டசபைத் தொகுதிகள் உருவாக்கப்படும். இதன் மூலம் தமிழக சட்டசபையின் உறுப்பினர் எண்ணிக்கை 351 ஆக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள்

  • தற்போதைய தொகுதிகள்: 39
  • கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ள தொகுதிகள்: 20
  • உத்தேச மொத்த தொகுதிகள்: 59

தமிழகத்தில் சட்டசபைத் தொகுதிகள்

  • தற்போதைய தொகுதிகள்: 234
  • கூடுதல் தொகுதிகள்: 117
  • உத்தேச மொத்த தொகுதிகள்: 351

தமிழகத்தில் 20 பெண் எம்.பி.க்கள்?

புதிய தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் மக்களவை மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

இதன்படி தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்தால், சுமார் 20 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

117 பெண் எம்.எல்.ஏ.க்கள்?

தமிழக சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 351 ஆக அதிகரிக்கும்போது, மூன்றில் ஒரு பங்கு அடிப்படையில் 117 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படும்.

2051 வரை பாதுகாப்பு

புதிய மசோதாவின்படி மறுவரையறை செய்யப்படும் மக்களவை மற்றும் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் எல்லைகளும் 2051-ஆம் ஆண்டு வரை மாற்றமின்றித் தொடரும்.

எனினும், புதிய மசோதாவில் மாநில வாரியான இறுதித் தொகுதி எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்டு, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்ட பின்னரே தமிழகத்துக்கான அதிகாரப்பூர்வ தொகுதி எண்ணிக்கை தெரியவரும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel