VIDEO: ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி- கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

By Pandeeswari Gurusamy

|

Published on 27 Nov 2026, 8:22 PM

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷை போலீசார் இன்று கைது செய்தனர்.

பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஐஜி காமினி விசாரணையைக் கண்காணித்து வந்தார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட புகாருடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

மேலும், மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதித்துறை நடுவர் முன்னிலையில் ரகசிய வாக்குமூலமும் அளித்தார்.

இந்நிலையில், விசாரணையின் தொடர்ச்சியாக இன்று (நவம்பர் 27) சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் அருள் விக்னேஷை கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel