மக்களவை, சட்டசபை தொகுதிகள் 50% அதிகரிப்பு; 2051 வரை பாதுகாப்பு: புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் என்ன இருக்கிறது? முழு விவரம்!

By Mathi

|

Published on 27 Nov 2026, 11:48 PM

Delimitation Bill 2026

நாடு முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிப்பது, அவ்வாறு மாற்றியமைக்கப்படும் தொகுதி வரையறையை 2051-ஆம் ஆண்டு வரை மாற்றமின்றித் தொடர்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன் கூடிய 132-வது அரசியல் சாசனத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று (நவம்பர் 27) ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

ADVERTISEMENT

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள 12 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில் அரசியல் சாசனத்தின் 54, 55, 81, 82, 170, 330, 332 மற்றும் 334A ஆகிய 8 பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் அதிகரிப்பு

ஒவ்வொரு மாநிலத்துக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்படும்.

ADVERTISEMENT

இதேபோல அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டசபைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களிலும் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்படும்.

Provided that for the purposes of giving immediate effect to such reservation, the delimitation so undertaken shall provide for an increase of fifty per cent. in-

ADVERTISEMENT

(a) the number of seats allocated to each State and Union territory in the House of the People; and

(b) the total number of seats in the Legislative Assembly of each State and Union territory,

over and above the number of seats existing immediately before such delimitation.

மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 850

மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அரசியல் சாசனத்தின் 81-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி மாநிலங்களில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 530-ல் இருந்து 815 ஆக உயர்த்தப்படும்.

யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 20-ல் இருந்து 35 ஆக உயர்த்தப்படும்.

இதன் மூலம் மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 550-ல் இருந்து 850 ஆக உயர்த்தப்படும்.

In article 81 of the Constitution,-

(a) in clause (1),-

(i) in sub-clause (a), for the words “five hundred and thirty”, the words “eight hundred and fifteen” shall be substituted;

(ii) in sub-clause (b), for the word “twenty”, the word “thirty-five” shall be substituted;

சட்டசபையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 650

மாநில சட்டசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அரசியல் சாசனத்தின் 170-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி ஒரு மாநில சட்டசபையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-ல் இருந்து 650 ஆக உயர்த்தப்படும்.

In article 170 of the Constitution,

(a) in clause (1), for the words “five hundred”, the words “six hundred and fifty” shall be substituted;

2051 வரை தொகுதி மறுவரையறைக்குப் பாதுகாப்பு

புதிய தொகுதி மறுவரையறையின் மூலம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை, மாநில சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் எல்லைகள் ஆகியவை 2051-ஆம் ஆண்டு வரை மாற்றமின்றித் தொடரும்.

இதற்காக அரசியல் சாசனத்தின் 81, 82 மற்றும் 170-வது பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

In article 82 of the Constitution, in the third proviso,-

(i) for the words and figures “until the relevant figures for the first census taken after the year 2026 have been published”, the words and figures “until the year 2051” shall be substituted;

(ii) in item (i), for the words and figures “on the basis of the 1971 census”, the words, figures and letter “in accordance with article 334A” shall be substituted;

(iv) the allocation of seats and the division into territorial constituencies so readjusted to continue until the year 2051;

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி எல்லைகள்

மக்களவை மற்றும் சட்டசபைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்கு 132-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் நாளில் கிடைக்கக்கூடிய கடைசியாக வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் பயன்படுத்தப்படும்.

இதற்காக அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற வாசகம் மாற்றப்படுகிறது.

(iii) in item (ii), for the figures and word “2001 census”, the words, brackets and figures “latest published census figures available on the date of the commencement of the Constitution (One Hundred and Thirty-second Amendment) Act, 2026” shall be substituted.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு

மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் டெல்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களின் சட்டசபைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

புதிய அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படும் முதல் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலும் மகளிருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

334A. (1) Notwithstanding anything in the foregoing provisions of this Part or Part VIII, the reservation of seats for women in the House of the People, the Legislative Assembly of a State, the Legislative Assembly of the National Capital Territory of Delhi, the Legislative Assembly of the Union territory of Puducherry and the Legislative Assembly of the Union territory of Jammu and Kashmir shall take effect after the first delimitation exercise undertaken upon the commencement of the Constitution (One Hundred and Thirty-second Amendment) Act, 2026:

மகளிர் இடஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு

2023-ஆம் ஆண்டின் 106-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வரை மகளிர் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கான காலத்தை நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் நீட்டிக்கலாம்.

(2) The reservation of seats for women in the House of the People, the Legislative Assembly of a State, the Legislative Assembly of the National Capital Territory of Delhi, the Legislative Assembly of the Union territory of Puducherry and the Legislative Assembly of the Union territory of Jammu and Kashmir shall cease to have effect on the expiration of a period of fifteen years from the commencement of the Constitution (One Hundred and Sixth Amendment) Act, 2023 unless Parliament may by law extend the period for such further time as it may specify in this behalf.

சுழற்சி முறையில் மகளிர் தொகுதிகள்

மக்களவை மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்படும்.

மகளிருக்கான தொகுதிகளை நிர்ணயிக்கும் அமைப்பு மற்றும் சுழற்சி முறை தொடர்பான நடைமுறைகளை நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் தீர்மானிக்கும்.

(3) The reservation of seats for women in the House of the People, the Legislative Assembly of a State, the Legislative Assembly of the National Capital Territory of Delhi, the Legislative Assembly of the Union territory of Puducherry and the Legislative Assembly of the Union territory of Jammu and Kashmir shall be allotted by rotation in a State or a Union territory, by such authority and in such manner, as Parliament may by law determine.

தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பிரதிநிதித்துவம் தொடரும்

தற்போதைய மக்களவை அல்லது சம்பந்தப்பட்ட மாநிலம், யூனியன் பிரதேசத்தின் சட்டசபை கலைக்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பிரதிநிதித்துவத்தை மகளிர் இடஒதுக்கீடு பாதிக்காது.

(4) Nothing in this article shall affect any representation in the House of the People, the Legislative Assembly of a State, the Legislative Assembly of the National Capital Territory of Delhi, the Legislative Assembly of the Union territory of Puducherry or the Legislative Assembly of the Union territory of Jammu and Kashmir until the dissolution of the then existing House of the People or the Legislative Assembly of a State or Union territory.

பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொகுதிகள்

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை, புதிய அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் நாளில் கிடைக்கக்கூடிய கடைசியாக வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படை 2051-ஆம் ஆண்டு வரை தொடரும்.

இதற்காக அரசியல் சாசனத்தின் 330-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

In article 330 of the Constitution, in the proviso to the Explanation, for the words and figures “until the relevant figures for the first census taken after the year 2026 have been published, be construed as a reference to the 2001 census”, the words, figures and brackets “until the year 2051, be construed as a reference to the latest published census figures available on the date of the commencement of the Constitution (One Hundred and Thirty-second Amendment) Act, 2026” shall be substituted.

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு இடஒதுக்கீட்டுப் பாதுகாப்பு

அருணாசலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 5 வடகிழக்கு மாநிலங்களின் சட்டசபைகளில் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு இடஒதுக்கீட்டுப் பாதுகாப்பு தொடரும்.

2051-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைக்கு வரும் வரை இந்தச் சிறப்பு இடஒதுக்கீட்டுப் பாதுகாப்பு நீடிக்கும்.

இதற்காக அரசியல் சாசனத்தின் 332-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

(v) continuation of the existing special provisions for reservation of seats for the Scheduled Tribes in the Legislative Assemblies of the States of Arunachal Pradesh, Meghalaya, Mizoram, Nagaland and Tripura until the readjustment taking effect after the year 2051;

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ.க்கள்

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அரசியல் சாசனத்தின் 54-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான மாநிலம் என்ற வரையறைக்குள் சேர்க்கப்படும்.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வழிவகை செய்யப்படும்.

Explanation.—In this article and in article 55, “State” includes the Union territory of Jammu and Kashmir, the National Capital Territory of Delhi and the Union territory of Puducherry.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு மதிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பைக் கணக்கிடுவதற்கு 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களே 2051-ஆம் ஆண்டு வரை அடிப்படையாக இருக்கும்.

இதற்காக அரசியல் சாசனத்தின் 55-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

In article 55 of the Constitution, in the proviso to the Explanation, for the words and figures “until the relevant figures for the first census taken after the year 2026 have been published”, the words and figures “until the year 2051” shall be substituted.

புதிய சட்டம் அமலுக்கு வரும் நாள்

மத்திய அரசு அரசிதழில் அறிவிக்கும் நாளில் இருந்து 132-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும்.

(2) It shall come into force on such date as the Central Government may, by notification in the Official Gazette, appoint.

மத்திய அரசின் புதிய அரசியல் சாசன திருத்த மசோதா:

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel