தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முதவ்லர் விஜய் பொறுப்பேற்றதும் முதலாவது அரசு நியமன பதவியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டது. இதற்கு விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தரும் காங்கிரஸ், சிபிஎம், விசிக கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
சட்டசபையில் இன்று மே 13-ந் தேதி விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் விஜய் அரசுக்கு ஆதரவான கட்சிகளும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்.எல்.ஏ.வும் கடுமையாக இந்த நியமனத்தை விமர்சித்தனர்.

இதனையடுத்து ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரவாணையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
