நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி – ஆட்சியை தக்க வைத்த தவெக

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்று (மே 13) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் நடைமுறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். வெளியில் சென்ற உறுப்பினர்களை அவைக்கு அழைக்கும் வகையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டது. பின்னர் பேரவையின் நுழைவு வாயில்கள் அனைத்தையும் மூடும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். கதவுகள் மூடப்பட்டதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.

ADVERTISEMENT

தமிழக சட்டசபை மொத்த பலம் 234

திருச்சி கிழக்கு ராஜினாமாவால் காலி இடம்
தவெக எம்.எக்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு நீதிமன்றம் தடை

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இல்லாமல்
சட்டசபையின் பலம் 231.

ADVERTISEMENT

திமுக, தேமுதிக வெளிநடப்பு: 59+1- 60 இதில் மதிமுகவின் எம்.எல்.ஏக்களான சீர்காழி செந்தில் செல்வன், கடையநல்லூர் திமு ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் இன்றைய சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பு நடந்த போது சட்டசபை எம்.எல்.ஏக்கள் 171

ஆதரவு விபரம்

தவெக – 105
காங்கிரஸ் – 5
சிபிஐ – 2
சிபிஎம் – 2
விசிக – 2
முஸ்லீம் லீக் – 2
எஸ்பி வேலுமணி அதிமுக-25
சுயேட்சை-1
மொத்தம் : 144 (ஆதரவு )

பாஜக : நடுநிலை -1
பாமக : நடுநிலை – 4

எடப்பாடி தரப்பு எதிர்ப்பு : 22

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share