அதிமுக எஸ்பி வேலுமணியை சபாநாயகர் பேச அனுமதித்தது தப்புதான்.. சிபிஎம் மாஜி எம்.எல்.ஏ. பாலபாரதி

Published On:

| By Mathi

CPM Speaker

தமிழக சட்டசபையில் அதிமுகவின் எஸ்பி வேலுமணியை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர பேச அனுமதி அளித்தது தவறான செயல் என்று தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. திண்டுக்கல் பாலபாரதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பாலபாரதி பதிவிட்டுள்ளதாவது: சட்டமன்ற விதிகளின்படி கட்சியின் கொறடா வழங்கும் பெயரில் உள்ளவர் தான் பேசுவதற்கு அழைக்கப்பட வேண்டும்…
ஆனால் சபாநாயகர் இது புதிய மரபு என்கிறார்.விதிகளுக்கும் மரபுகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளன.இது சட்டமன்ற விதிகளுக்கு புறம்பானதாகும்.

ADVERTISEMENT
  • அரசு அங்கீகாரத்தின்மீதான வாக்கெடுப்பில் அதிகாரப்பூர்வ கட்சியை தான் கொறடா கடிதத்தின் மீது அழைக்கவேண்டும்.
  • இரண்டு தரப்பு கொடுத்தால் அதில் அதிகாரப்பூர்வமான கட்சி( அதாவது கடிதம் கொடுக்கிற போது…) அதிலிருந்துதான் அழைக்கவேண்டும். இவ்வாறு சிபிஎம் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share