முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது விஜய் அரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக ஆட்சியில் இருந்தபோது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

ADVERTISEMENT

பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தி மு.க.ஸ்டாலின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி ​வைத்​தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற தவெக அரசு, இத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்து உத்தரவிட்டது. வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தற்போது ‘முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின்’ பெயரை தவெக அரசு அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. இனி இத்திட்டம் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என்ற பெயரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக செயல்பட்டு வந்த ‘நான் முதல்வன்’, ‘மகளிர் விடியல் பயணம்’ உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு அண்மையில் மாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share