2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் ஜூலை 4-ந் தேதி நடைபெறுகிறது. Vijay TVK
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியும் அதிமுக- பாஜக கூட்டணியும் உறுதியாகி உள்ளன. தவெக, பாமக, தேமுதிக கட்சிகள் கூட்டணி குறித்து முடிவை அறிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

தவெக செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, விஜய்யின் தமிழக சுற்றுப் பயணம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.