அதிமுக பீஸ் பீஸாகி வருவது தெரியாமல்.. ஈபிஎஸ் மீது தவெக அட்டாக்!

Published On:

| By Mathi

TVK Attacks EPS as AIADMK’s Internal Crisis Deepens

”அதிமுக கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையை எடப்பாடி பழனிசாமி பார்க்கட்டும்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் கடுமையாக சாடியுள்ளது.

சேலத்தில் இன்று ஜூலை 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்தார். அப்போது, “திமுகவை எதிர்ப்பதில் அதிமுக எப்போதும் உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. அதிமுக கூட்டுக் களவாணி அல்ல; இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்து, தனது கட்சியில் இணைத்துக் கொண்ட முதல்வர் விஜய் தான் உண்மையான களவாணி” எனவும் சாடினார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

இதற்கு தவெகவின் ஐடி விங், “கட்சி நடக்கிறதா? கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.

திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.

ADVERTISEMENT

கொடநாடு கொலைவழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் டிவிகே அரசு பற்றி குறைகூறுவது குபீர் சிரிப்பு காமெடி.

கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்” என பதிலடி தந்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share