டிரையம்ப் நிறுவனத்தின் புதிய பைக்குகள் அறிமுகம்!

Published On:

| By Jegadeesh

டிரையம்ப் நிறுவனம் புதிதாக ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மாடல் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்த ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்களின் இரண்டு மாடல்களிலும் 398 சி.சி. திறன் கொண்ட டி.ஆர். சீரிஸ் ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது. என்ஜினைக் குளிர்விக்க லிக்விட் கூலன்ட் பகுதி இதில் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் ரைடு பை வயர் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு உள்ளது. டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைந்த எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இதில் முன்பக்கம் ஒரு ரவுண்டு LED ஹெட் லேம்ப், LED இண்டிகேட்டர், அகலமான ஹாண்டில் பார், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சைடு ஸ்லங் எக்ஸாஸ்ட் வசதி, சிங்கள் சீட், பின்பக்க LED டைல் லைட் வசதி, ஹாண்டில் பார் எண்டு மிரர் வசதி உள்ளது.

ADVERTISEMENT

நிறத்தை பொறுத்த வரை, சிவப்பு, கருப்பு, நீலம், சாம்பல் நிறங்களில் கிடைக்கும்.

இந்த பைக் ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 40 ஹெச்.பி. திறனையும், 6,500 ஆர்.பி.எம். சுழற்சியில் 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.

ADVERTISEMENT

இரண்டு மாடல்களும் 5 கியர்களைக் கொண்டவையாகும். ஸ்பீட் 400 பைக்கின் எடை 170 கி.கி., ஸ்கிராம்ப்ளர் எக்ஸ் பைக்கின் எடை 179 கி.கி. ஆகும்.

Triumph Just Launched Its Smallest Bike In India

இது ஹைபிரிட் ஸ்பைன் பெரிமெட்டர் பிரேம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் 17/17 இன்ச் அலுமினியம் அலாய் வீல், சஸ்பென்ஸன் வசதிகளாக முன்பக்கம் பிரீமியம் 43mm USD போர்க்,

பின்பக்க ப்ரீ லோட் அடஜஸ்ட் மோனோ ஷாக் வசதி, டூயல் சேனல் ABS சிஸ்டம், முன்பக்க 300mm டிஸ்க், பின்பக்கம் 230mm டிஸ்க் பிரேக், ரோடு வகை டியூப்லெஸ் டயர்கள் உள்ளது.

Triumph Just Launched Its Smallest Bike In India

ஸ்பீட் 400 பைக்கை பொறுத்தவரை 2.33 லட்சம் ரூபாய்விலையில் தொடங்குகிறது.

முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையுடன் 2,23,000 லட்சத்தில் கிடைக்கும்.

ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸைன்பொறுத்தவரை விலை பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராயல் என்பீல்ட், ஹார்லே டேவிட்சன் பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்த பைக்குகள் வாடிக்கையாளர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மருத்துவ மாணவர்கள் சேர்க்கை: கல்வி கட்டணம் உயர்வு!

சென்னை: கொரோனாவின்போது இரவு நேரத்தில் மூடப்பட்ட 33 மேம்பாலங்கள் மீண்டும் திறப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share