விஜய் ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இடமாற்றம்

By Pandeeswari Gurusamy

|

Published on 10 May 2026, 5:44 PM

Vijay

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் அலுவலக (CMO) பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக, பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் 14 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை முதலமைச்சர் அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரிவு அலுவலர்கள்:

  • செல்வ கணபதி உள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை) – துணைச் செயலாளர் (Under Secretary).
  • கணேஷ் (சட்டத் துறை) – தனிச் செயலாளர் (Private Secretary).
  • என். பிரபாகரன் (மனிதவள மேலாண்மைத் துறை) – பிரிவு அலுவலர்.
  • இ. பிரவீன் குமார் (பள்ளிக் கல்வித் துறை) – பிரிவு அலுவலர்.
  • ஏ.வி. ஹரிஷ் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) – உதவிப் பிரிவு அலுவலர்.
  • எஸ். பிரகாஷ் கிறிஸ்டோபர் (பொதுத்துறை) – உதவிப் பிரிவு அலுவலர்.
  • எஸ். சிவசங்கரன் (தொழில் துறை) – நேர்முக உதவியாளர் (Personal Assistant).
  • ஆர். ஹரிகிருஷ்ணன் (பள்ளிக் கல்வித் துறை) – உதவியாளர்.
  • ஆர். பூபாலன் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) – உதவியாளர்.
  • பி. சந்தோஷ் குமார் (உயர்கல்வித் துறை) – தட்டச்சர்.
  • வி. விக்னேஷ் (சட்டத் துறை) – தட்டச்சர்.
  • வி. கேசவன் (பொதுத்துறை) – பதிவு எழுத்தர் (Record Clerk).
  • எஸ். செல்வகுமார் (WDAP துறை) – அலுவலக உதவியாளர்.
  • வி. அசோக் (WDAP துறை) – அலுவலக உதவியாளர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel