தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் கருப்பையா

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தற்காலிக சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து துறைசார்ந்த அதிகாரிகள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராகப் பொறுப்பேற்றார்.

ஆளுநர் அர்லேகர் அவருக்கு ஆளுநர் மாளிகையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாளை காலை 9.30 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதன் பின்னர் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share