தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்ட கோப்பில் கையெழுத்திட்டார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்கு சென்ற முதல்வர் விஜய் கோப்புகளில் கையெழுத்திட்டு அலுவல் பணிகளை தொடங்கினார்.
முதலாவதாக, 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசம் என்ற திட்டத்தின் கோப்பில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக தமிழக வெளியிட்டுள்ள உத்தரவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் வீட்டு மின் இணைப்பில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம். 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
