தந்தை பெரியார் வாழ்க!- பெரியார் திடலில் முழக்கமிட்ட முதல்வர் ஜோசப் விஜய்

Published On:

| By Mathi

Periyar CM Vijay

தமிழக முதல்வராகப் பதவியேற்ற முதல்வர் ஜோசப் விஜய், தந்தை பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக ஜோசப் விஜய் இன்று மே 10-ந் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ADVERTISEMENT

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழா முடிவடைந்த பின்னர் தலைமைச் செயலகம் சென்று தமது பணிகளைத் தொடங்கினார் முதல்வர் ஜோசப் விஜய்.

பின்னர் தலைமை செயலகத்தில் இருந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்றார் முதல்வர் விஜய். அங்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ADVERTISEMENT

பின்னர் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் விஜய். அப்போது, ’தந்தை பெரியாருக்கு தவெகவின் புகழ் வணக்கம்’ ‘வாழ்க வாழ்கவே! தந்தை பெரியார் வாழ்க வாழ்கவே’! என்பது உள்ளிட்ட முழக்கங்களை முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் எழுப்பினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share