பணியிட மாறுதல் : ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

2026-27 கல்வியாண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு இன்று (ஜூன் 9) வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககங்கள் இணைந்து, 2026-27ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பணிநிரவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் உத்தேச கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளன..

ADVERTISEMENT

இக்கலந்தாய்வு முற்றிலும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கோரும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஜூன் 15, 2026 முதல் ஜூன் 22, 2026 அன்று மாலை 6.00 மணி வரை தங்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 

ADVERTISEMENT

தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால், விருப்பமுள்ள அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். 

இந்த பொதுப் பணிமாறுதல் கலந்தாய்வு, வரும் ஜூலை 1 முதல் ஜூலை 16 வரை பல்வேறு நிலைகளாக நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

மாவட்டத்திற்குள்ளான மாறுதல், வெளிமாவட்ட மாறுதல் மற்றும் உபரி ஆசிரியர்களைத் தேவையான இடங்களுக்குப் பணி நிரவல் செய்தல் போன்ற பிரிவுகள் முறையான விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஃபைலை பார்த்து தெரிந்துகொள்ளலாம். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share