எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனு மீது தீர்ப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இடைக்கால முன்ஜாமீன் மனு மீது இன்று (ஜூலை 4) உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
டெல்லி வந்தடைந்தது இந்திய அணி!
புயல் கரையை கடந்ததை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட நிலையில் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தனர்.
மோடி – இந்திய அணி சந்திப்பு!
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினரை இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளார்.
உலகக்கோப்பையுடன் இந்திய அணி பேரணி!
இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியை கௌரவிக்கும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு மும்பை மரைன் டிரைவ் முதல் வான்கடே மைதானம் வரை பேருந்தில் பேரணியாக செல்ல உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சம்பந்தன் உடல்!
மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் உடலானது யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அமெரிக்க சுதந்திர தினம்!
கிரேட் பிரிட்டனில் இருந்து 1776 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
பிரிட்டனில் பொதுத் தேர்தல்!
பிரிட்டனில் பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து!
பொறியியல் பணி காரணமாக சென்னையில் இன்று முதல் சென்னை மூர் மார்க்கெட்-திருத்தணி, அரக்கோணம்-திருத்தணி மற்றும் ரேணிகுண்டா மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 109வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: நெல்லை, கோவை… இரண்டு மேயர்கள் மட்டும்தானா? தொடரும் ஹிட் லிஸ்ட்!