டாப் 10 நியூஸ் : இமானுவேல் சேகரன் நினைவு நாள் முதல் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் வரை!

Published On:

| By christopher

Top 10 News : From Emanuel Sekaran Memorial Day to Shop Closure!

இமானுவேல் சேகரன் நினைவு நாள்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தலைவர்கள் மரியாதை!

இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி தமிழக அரசு சார்பில் உதயநிதிஸ்டாலின், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.

ADVERTISEMENT

இரண்டு நாட்கள் கடையடைப்பு!

வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று, நாளை என மொத்தம் 2 நாட்கள் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

இமானுவேல் சேகரன் நினைவு தின குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தடை!

விநாயகர் சிலைகள், இன்று ஊர்வலமாக கடலில் கரைக்க எடுத்து செல்லப்படுவதால் புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

எம்ஜி (MG) கார் அறிமுகமாகிறது!

விமானத்தின் முகப்பு பகுதியைப் பிரதிபலிக்கும் முன் பக்கத்தைக் கொண்ட எம்ஜி (MG) நிறுவனத்தின் விண்ட்ஸர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

டிஎன்பிஎஸ்சி – இன்றே கடைசி நாள்!

டிப்ளமோ/ ஐடிஐ படித்தவர்களுக்கான டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்!

29 ஆண்டுகளுக்கு பின் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று முதல் 16ம் தேதி வரை, இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 178வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : விரால் மீன் ரோஸ்ட்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திருமா அழைப்பு… மாநாட்டை  திமுக புறக்கணிப்பு: கொந்தளிக்கும் அமைச்சர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share