விஜய் துணை பிரதமர் வேட்பாளர்? அமைச்சர் விஸ்வநாதன் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

2029-ல் விஜய் துணை பிரதமர் வேட்பாளரா?

Vijay as Deputy PM Candidate?: 2029 மக்களவைத் தேர்தலில் தமிழக முதல்வர் விஜய், துணை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா? என்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமான விஸ்வநாதன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சென்னையில் நேற்று செப்டம்பர் 4-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது: 2029 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். துணைப் பிரதமர் வேட்பாளராக விஜய் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு இப்போது நான் பதிலளிக்க விரும்பவில்லை. ராகுல் காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; இதில் எந்த மாற்றமும் இல்லை.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மிகவும் வலிமையாக இயங்கி வருகிறது. கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டரை ஆண்டுகள் மக்களவைத் தேர்தலுக்கு இருப்பதால், இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம். மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வகுத்தளித்த திட்டங்களின் அடிப்படையில் கட்சி வேகமாக முன்னேறி வருகிறது.

தவெகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை; இது போன்ற சிறு உரசல் எல்லா கட்சிகளிலும் கூட்டணிகளிலும் இயல்பாக நடப்பதுதான். மம்தா பானர்ஜி, சரத் பவார், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அவரவர் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படலாம். இருப்பினும், 2029 தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒரே பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமே இருப்பார். இவ்வாறு அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share