டிஜிட்டல் திண்ணை: களமிறங்கிய ஸ்டாலின்.. ஆடிப் போன விஜய்.. மீண்டும் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு- நடந்தது என்ன?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ”எதிரிகள் கை கோர்க்க.. எழுந்து நிற்குதே நம்ம சக்தி”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. யாரு கை கோர்க்க? என்ன நடக்கப் போகுதாம்?

ADVERTISEMENT

சிபிஐ சிபிஎம்- தவெக தலைவர்கள் சந்திப்பு

சொல்றேன் ப்ரோ.. தவெக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் 4 பேரும் அடுத்தடுத்து சிபிஐ வீரபாண்டியன், சிபிஎம் சண்முகம், மதிமுக வைகோன்னு ஆதரவு கட்சிகளின் தலைவர்களை இன்னைக்கு திடீர்னு சந்திச்சு பேசுனாங்க.. விசிக தலைவர் திருமாவளவனையும் நாளைக்கு இந்த அமைச்சர்கள் டீம் சந்திக்க போகுது..

ADVERTISEMENT

இதை பத்தி சிபிஐ வீரபாண்டியன் சொல்றப்ப, “தவெக நிர்வாகிகளாகத்தான் 3 அமைச்சர்களும் சந்திச்சாங்க.. இப்ப இருக்கிற அரசியல் நடப்பை பத்தி பேசுனோம். நாங்க தவெக கூட்டணியில இல்லை.. ஆட்சிக்குதான் ஆதரவு தருகிறோம்”ன்னு சொன்னார்.

செப்டம்பர் 9-ல் தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்.

ADVERTISEMENT

இந்த சந்திப்புகளை பத்தி விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்துல விசாரிச்சப்ப, “தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை ஜூலை 1-ந் தேதி சிஎம் விஜய் நடத்துனாரு.. அன்னைக்கு கூட்டத்துல சிபிஐ, சிபிஎம் லீடர்ஸ் கலந்துக்கல.. ஆனா அன்னைக்கு காலையில சிஎம் விஜய்யை சந்திச்சு பேசிட்டு போனாங்க லெப்ட் லீடர்ஸ்.. இப்ப மறுபடியும் செப்டம்பர் 9-ந் தேதி தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்குது.. இந்த முறையாவது சிபிஐ, சிபிஎம் கட்சிகளை இந்த கூட்டத்துல கலந்துக்க வைக்கனும்னுதான் மினிஸ்டர்ஸ் டீம், இன்னைக்கு அந்த கட்சி லீடர்ஸை சந்திச்சு பேசுனாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ..

விஜய்யின் திடீர் மூவ் பின்னணி என்ன?

தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை திடீர்னு சிஎம் விஜய் எதுக்கு கூட்டுறாருன்னு நாம பல்வேறு தரப்பில விசாரிச்சப்ப, “2029-ல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தின்னு பிரசாரம் செய்யுது காங்கிரஸ். ஆனால் காங்கிரஸை கடுப்பேத்துற வகையில 2029-ல் விஜய்தான் தவெக பிரசாரம் செய்யுது.. அதுவும் வடக்கே பொய் பொய்யா ரீல்ஸ் போட்டு விஜய்தான் பிஎம் கேண்டிடேட்டுன்னு பிரசாரம் செய்யறாங்க..

இது காங்கிரஸ் மேலிடத்தை ரொம்பவே அப்செட் ஆக்கிடுச்சு.. அதனாலதான் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் விஜய்யை நேரில் சந்திச்சு பேசுனாங்க.. அந்த சந்திப்பில, “பிரதமர் வேட்பாளர் பத்தி எங்க சீனியர்கள் யாரும் பேசமாட்டாங்க.. கட்சி நிர்வாகிகள் அப்படி பேசினாலும் பெருசுபடுத்தாதீங்க..”ன்னு பட்டும் படாமலும் சொல்லி இருந்தார்..

இது காங்கிரஸுக்கு திருப்தி தரலை.. காங்கிரஸின் டெல்லி மேலிடம் குறிப்பா ராகுல் காந்தி, “ஆஹா.. நாம தப்பு பண்ணிட்டோமோ? விஜய் ஆட்சிக்கு அமைக்க அவசரப்பட்டு ஆதரவு தந்துட்டோமோ”ன்னு சக லீடர்ஸ்கிட்ட அதிருப்தியா பேசிகிட்டு இருக்கிறார்.

இந்த தகவல் ஸ்டாலினுக்கும் கிடைக்குது.. ஸ்டாலினும், திமுக சீனியர் லீடர்ஸ்கிட்ட, ”காங்கிரஸ் என்ன மனநிலையில் இருக்கு?”ன்னு கவனியுங்க.. அப்டேட் பண்ணுங்கன்னு சொல்லி இருந்தார்.

இன்னொரு பக்கம், சிபிஐ-சிபிஎம் லீடர்ஸ் ரொம்பவே விஜய் ஆட்சியை விமர்சிச்சுகிட்டு இருக்காங்க.. அதுவும் சிபிஐ, சிபிஎம்-க்கு எதிராக தலைமை செயலாளர் சுற்றறிக்கை விட்ட விவகாரம் எல்லாம் ‘தோழர்களை’ இன்னமும் கொதிக்க வெச்சுகிட்டுதான் இருக்குது..

இதை எல்லாம் கால்குலேஷன் போட்ட ஸ்டாலின், காங்கிரஸ்- விசிக- இடதுசாரி தலைவர்களை பத்தி இனிமேல் விமர்சனம் வைக்க வேண்டாம்.. ”நாமும் பேசினோம்.. அவங்களும் பேசினாங்க”ன்னு ஸ்டாப் பண்ணிடுங்கன்னு கட்சி சீனியர்கள்கிட்ட சொல்லிட்டாராம். இதனாலதான் உதயநிதி சட்டசபையில பேசும் போது, “திருமாவளவன் என் ஆசான்”ன்னு வெளிப்படையாகவே சொன்னாராம்..

ஸ்டாலினின் இந்த அதிரடியான மூவ்ஸ் எல்லாம் அப்படியே சிஎம் விஜய்க்கு போனதால, “ஆஹா திமுக இப்படி இறங்குதா?”ன்னு செக் வைக்கதான் தவெக கூட்டணி கட்சிகள் கூட்டணியை செப்டம்பர் 9-ந் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டதாம்.. அந்த கூட்டத்துல எப்படியாவது சிபிஐ, சிபிஎம் லீடர்ஸை உட்கார வெச்சுடனும்னு ரொம்பவே விஜய் தரப்பு தீவிரமா இருக்குதாம்.. அதுக்குதான் இன்று 4 மினிஸ்டர்ஸும் சிபிஐ, சிபிஎம் லீடர்ஸை நேரில சந்திச்சு பேசுனாங்களாம் ப்ரோ..

சரிங்க ப்ரோ.. செப்டம்பர் 9-ந் தேதி தவெக கூட்டணி கூட்டத்துல என்ன பேசப் போறாங்களாம்?

இதை பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “சிபிஐ, சிபிஎம் லீடர்ஸ் ரொம்ப அழுத்தமா சொல்லிகிட்டு இருக்கிறது.. தவெக லீடர்ஸை மினிஸ்டர்ஸை சட்டுன்னு தொடர்பு கொள்ள முடியலை.. பிரச்சனைகளை பேச முடியலைன்னு அப்படிங்கிறதுதான்.. அதுக்காகவே ’தவெக கூட்டணி’க்கான ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்குறதை பத்தி செப்டம்பர் 9-ந் தேதி கூட்டத்துல பேசி அறிவிப்பு வெளியிடுவாங்க..

அடுத்ததாக இந்த கூட்டணிக்கு ஒரு பெயர் வைக்கிறதை பத்தி முடிவெடுப்பாங்க.. ஏற்கனவே ”தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு” கூட்டணிக்கு பிரவீன் சக்கரவர்த்தி தானா ஒரு பெயரை அறிவிச்சாரு.. அந்த மாதிரி ஒரு பேரை டிஸ்கஷன் செஞ்சு முடிவு எடுப்பாங்க..

முக்கியமா இந்த கூட்டத்துல, பிரதமர் கேண்டிடேட் விவகாரம் பத்தி சீரியசா டிஸ்கஷன் செய்வாங்க… 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்னு இந்த ஆலோசனை கூட்டத்துல முடிவெடுத்து அறிவிக்கவும் சான்ஸ் இருக்குங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share