திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (செப்டம்பர் 5) காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடையாறு, திருவான்மியூர், ஆர்.ஏ.புரம் பகுதிகளில் கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்துகின்றனர். இதேபோல திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு வீடு உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
திரண்ட திமுக தொண்டர்கள்
இதனிடையே திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு வீடு முன்பாக காலை முதலே திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். அப்போது, அனைவரையும் திமுக கட்சி அலுவலகத்துக்கு செல்லுமாறு கே.என்.நேரு கேட்டுக் கொண்டார்.
