பெருந்துறையில் ரூ.3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய்

By Pandeeswari Gurusamy

|

Published on 3 Nov 2026, 2:38 PM

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பெருந்துறைக்குச் சென்ற அவருக்கு, வழிநெடுகிலும் கூடியிருந்த பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பெருந்துறை ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்திற்கு வந்தடைந்த முதல்வர், அங்கு மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார். அவர்கள் தயாரித்த பொருட்களை பணம் கொடுத்து வாங்கினார். தனது உருவம் பொறிக்கப்பட்ட கைத்தறி படுக்கை விரிப்புகளை முதல்வர் விஜய் பார்வையிட்டு அவர்களிடம் பணம் கொடுத்து வாங்கினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 26,000 தொழில்முனைவோருக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

முதல்வர் ரோடு ஷோ

முன்னதாக, பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தின் முகப்பு வாசலுக்கு வேனில் வந்த முதல்வர், வாகனத்திலிருந்து கீழே இறங்கிப் பிரம்மாண்ட வீதி உலா (Road Show) மேற்கொண்டார். அப்போது அங்குத் திரண்டிருந்த பெண்கள் அவருக்குப் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, சிப்காட் வளாகச் சாலையில் திரண்டிருந்த மக்களை நோக்கியவாறு நடந்து சென்று, கையசைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோல் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் தொண்டர்களும் பொதுமக்களும் மலர்களைத் தூவியும், முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel