இடைத்தேர்தல் 2026: பகல் 1 மணி நிலவரம்.. தாராபுரம் 56.09%; மதுராந்தகம் 55.19% வாக்குகள் பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்குத் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டுகள் என 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இடைத்தேர்தலில் மதியம் 1 மணி வரை பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

வாக்குப்பதிவு சதவீதம்:

மதுராந்தகம் தொகுதி: மதியம் 1 மணி நிலவரப்படி 55.19% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தாராபுரம் தொகுதி: மதியம் 1 மணி நிலவரப்படி 56.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99% வாக்குகளும், தாராபுரத்தில் 17.55% வாக்குகளும் பதிவாகின. தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55% வாக்குகளும், தாராபுரத்தில் 37.28% வாக்குகளும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் 1 மணிளவில் மதுராந்தகத்தில் 57.22% வாக்குகளும் தாராபுரத்தில் 62.06 % வாக்குகளும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share