தாராபுரம் வாக்குச்சாவடியில் திடீர் மின்வெட்டால் பதற்றம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரம் வீராச்சிமங்கலம் வாக்குச்சாவடியில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

வாக்குப்பதிவு நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று வீராச்சிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 105-இல் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக இந்த மின்வெட்டு நீடித்தது.

வீராச்சிமங்கலம் அரசுப் பள்ளியில் ஏற்கனவே போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், வாக்களிக்கச் சென்ற வாக்காளர்கள் தடுமாறும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது செல்போனில் உள்ள ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை வாக்களிக்கச் செய்தனர்.

ADVERTISEMENT

பின்னர் ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் மின்சாரம் வந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share