தேர்தலில் ரூ.31 கோடி செலவு.. வைரல் வீடியோ குறித்து தவெக வேட்பாளர் சத்தியபாமா சொன்னது என்ன?

Published On:

| By Mathi

Dharapuram-Sathiyabama

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், “போன தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்தேன்” என்று தாம் பேசுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ குறித்து தவெக வேட்பாளர் சத்தியபாமா விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில், ”எடப்பாடி பத்து பைசா எடுக்க மாட்டாரு. பத்து பைசா எடுக்க மாட்டாரு. போன தடவ 31 கோடி செலவு…” என சத்தியபாமா பேசும் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இது தொடர்பாக இன்று சத்தியபாமாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “அந்த மாதிரி பேச்சு எல்லாம் இல்லை.. இது எல்லாம் சித்தரிக்கப்பட்டதுதான்.. எல்லாமே சித்தரிக்கப்பட்டதுதான்.. இது தேர்தலில் எதிரொலிக்காது. தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் கொடுப்பேன்” என்றார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share