முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது பட்ஜெட் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்
- காலை 10 மணி முதல் பகல் 12.32 மணி வரை பட்ஜெட் உரையை வாசித்தார் நிதி அமைச்சர் மரிய வில்சன்
- வருவாய் பற்றாக்குறை ரூ55,755 கோடியாக இருக்கும்
- வரி வருவாய் 9.78% ஆக வளர்ச்சி அடையும்
- நிதி நிர்வாகத்தை சீரமைக்க 2 ஆண்டுகள் தேவை
- இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ708 கோடி ஒதுக்கீடு; 3,000 திருக்கோவில்களுக்கு திருப்பணி- குடமுழுக்கு
- தமிழ்ப் பெருந்திரள் மொழி மாதிரி உருவாக்கப்படும்
- திருவள்ளுவர் நாளில் காயிதே மில்லத் நினைவாக புதிய விருது
- நீதி நிர்வாக துறைக்கு 2486 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ53 கோடியில் நதிநீர் சுற்றுலா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
- ரூ20 கோடியில் உணவு கலைத் திருவிழா நடத்தப்படும்
- மூத்த குடிமக்களுக்கான ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்
- ரூ838 கோடியில் அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு புதிய மருத்துவ காப்பீடு

- புதுக்கோட்டை, பெரம்பலூரில் கிரானைட் தொழிற்சாலைகள்
- ‘எங்கிருந்தும் பதிவு’.. பத்திரப் பதிவு முறையில் அறிமுகம்
- வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு ரூ11,352 கோடி ஒதுக்கீடு
- சூப்பர் எல்நினோ பாதுகாப்பு நடவடிக்கை
- அரசு காலி பணியிடங்கள் முறையாக நிரப்பப்படும்; பணியிட மாறுதல்கள் வெளிப்படையாக இருக்கும்.
- ஆட்சிப் பணி செயல் முறைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்
- உள்துறை, மதுவிலக்கு துறைக்கு ரூ17,290 கோடி ஒதுக்கீடு
- போதையில்லா தமிழகம்- ரூ70 கோடி ஒதுக்கீடு
- சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ரூ354 கோடி
- ரேசன் கடைகளில் கோதுமை மாவு வழங்கும் திட்டம் அறிமுகம்
- வீடு தேடி ரேசன் பொருட்கள் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
- ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறைக்கு ரூ39,609 கோடி ஒதுக்கீடு
- சிங்க பெண் வலிமைப்படுத்தும் திட்டம்; மகளிர் சுய உதவிகளுக்கு ரூ38,000 கோடி வங்கி கடன் இலக்கு
- ரூ100 கோடியில் வெற்றி 150 திட்டம் அறிமுகம்
- ரூ3500 கோடியில் 70,000 வெற்றி வீடுகள் திட்டம்
- ஏழைகளுக்கு “வெற்றி வீடு” திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது
- நீர்வளத்துறைக்கு ரூ9,264 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ322 கோடியில் நெய்தல் மீட்சி இயக்கம்
- காவிரி, கொள்ளிடம் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும்
- ரூ150 கோடியில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம்
- கர்நாடகாவின் மேகதாது அணை மாநிலத்தை பாதிக்கக் கூடியது
- காவிரி நீர் திறப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்
- ஓசூர்- கர்நாடகாவின் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை
- போக்குவரத்து துறைக்கு ரூ13,561 கோடி ஒதுக்கீடு
- சென்னைக்கு 1,000 மின்சார பேருந்துகள்
- மை ஹோம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள்
- வீட்டு வசதித் துறைக்கு ரூ8,252 கோடி ஒதுக்கீடு
- 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்; டிஜிட்டல் ரெண்ட் வவுச்சர் அறிமுகப்படுத்தப்படும்.
- ஸ்மார்ட் மீட்டர்கள், மின்சார வாகனங்கள் சார்ஜ் நிலையங்கள்
- தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் “விண்வெளி தொழில் முதலீட்டு” மண்டலமாக அறிவிக்கப்படும்.
- ரூ.3,200 கோடியில் புதிய சிப்காட்கள் அமைக்கப்படும்.
- வெளிநாடு வாழ் தமிழர் முதலீட்டு சேவை பிரிவு உருவாக்கப்படும்
- புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும்
- புதிய துறைமுகங்கள் அமைக்க ஆராயப்படும்
- ரூ35,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன
- ரூ57 கோடியில் 10,000 கறவை மாடுகள் விலை இல்லாமல் வழங்கப்படும்
- ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க வட்டி மானியத்துடன் கடனுதவி
- பணி இல்லாத காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை ரூ7,000 ஆக உயர்வு
- ரூ31 கோடியில் கால்நடைகளுக்கு காப்பீடு திட்டம்
- ரூ110 கோடியில் 30,000 பேருக்கு ”வெற்றி ஆடுகள் வளர்ப்பு திட்டம்” அறிமுகம்
- வேளாண்துறைக்கு ரூ14,984 கோடி ஒதுக்கீடு
- ரூ134 கோடியில் குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ஒப்புதல்
- கூட்டுறவு துறைக்கு ரூ8,028 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ18.05 கோடியில் டெலி மெடிஷன் மையங்கள்
- ரூ23 கோடியில் கர்ப்பிணி பெண்களுக்கான தாய் கேர் மையங்கள்
- ரூ33 கோடியில் கிராம ஊராட்சி தோறும் மருத்துவ சேவை மையங்கள்
- ரூ560 கோடியில் ’தாய்மாமன்’ அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்
- விஜய் மாமா என அழைக்கும் குழந்தைகளுக்காக 500 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்படும்
- ரூ.6.6 கோடியில் 12 மாவட்டங்களில் 12 மூத்த குடிமக்கள் இல்லங்கள் அமைக்கப்படும்
- ரூ812 கோடி நிதி ஒதுக்கீட்டில் திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டு புடவை வழங்கும் திட்டம்
- மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள் அறிவிப்பு
- பிசி/எம்பிசி/சிறுபான்மையினர் நலனுக்கு ரூ1750 கோடி ஒதுக்கீடு
- ஹஜ் பயணிகளுக்கான மானியம் ரூ25,000-ல் இருந்து ரூ35,000 ஆக உயர்வு
- சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதில் முன்னோடி மாநிலமாக திகழும்
- சமூக நீதி: 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்
- ரூ300 கோடியில் அயோத்திதாசர் வாழ்விட மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
- ரூ75 கோடியில் ஆதி திராவிடர்- பழங்குடியினருக்கு வெற்றி தொழில் முனைவோர் திட்டம்
- இளைஞர் நலன் துறைக்கு ரூ1,051 கோடி நிதி ஒதுக்கீடு
- ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் உருவாக்கப்படும்.
- சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ17,150 கோடி ஒதுக்கீடு
- ரூ.50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்
- தொழிலாளர் நலனுக்கு ரூ.2022 கோடி ஒதுக்கப்படும்
- AI துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்; 5 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
- ரூ.150 கோடியில் 20,000 இளைஞர்களுக்கு வெற்றி திறன் பயிற்சி திட்டம்
- 25,000 வாகன மெக்கானிக்குகளை உருவாக்க ரூ3 கோடியில் திட்டம்
- 5 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
- உயர் கல்வித் துறைக்கு ரூ8393 கோடி ஒதுக்கீடு
- 300 மானவர்களுடன் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்
- 1 லட்சம் படுக்கை வசதிகளுடன் மாணவர் விடுதி அமைக்கப்படும்
- ரூ10 கோடியில் மாணவர் தங்கும் விடுதி- உட்கட்டமைப்பு கழகம் அமைக்கப்படும்
- ரூ.2,000 கோடியில் கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
- பள்ளி கல்வி துறைக்கு ரூ44,571 கோடி ஒதுக்கீடு
- ஜென்சி இளம் தலைமுறையின் மாணவர்களுக்கு ரூ277 கோடியில் ஹெல்மெட்- வாட்டர் பாட்டில் வசதியுடன் சைக்கிள்
- பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு அமைப்பு அமைக்க ரூ7 கோடி ஒதுக்கீடு; புகார் அளிக்க 1058 டோல் ப்ரீ எண் அறிமுகம்
- பள்ளி பாடத் திட்டங்களை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு
- ரூ.125 கோடியில் பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும்
- 3,734 பள்ளிகளை மேம்படுத்த ரூ2,132 கோடி ஒதுக்கீடு
- ரூ.139 கோடியில் அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்; 10000 பள்ளிகளில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படும்.
- வருவாய் பெருக்கத்துக்கு மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
- மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு கூடுதல் கட்டணம் மூலம் ரூ1000 கோடி வருவாய் உயர்வு கிடைக்கும்
- அரசு பணத்தை தொட்டால் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்; முதல்வர் விஜய் பெயரை கேட்டாலே ஊழல் வாதிகள் ஓடி ஒளிகின்றனர்- மரியவில்சன்
- திட்ட அனுமதிகளுக்கான ஊழல் தடுக்கப்பட்டுள்ளது
- டெண்டர்கள் மூலம் கட்சிகளுக்கு சென்ற பணம் தடுக்கப்பட்டுள்ளது.
- நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க நடவடிக்கை
- செப்டம்பர் 15-ந் தேதி முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலுக்கு வரும்
- 10 அம்சங்களை கொண்ட வெற்றி தமிழகம் தொலை நோக்கு திட்டம்
- 200 யூனிட் மின்சார இலவசத்தால் மக்களின் கட்டண சுமை குறைந்தது- மரிய வில்சன்
- 3 மாத விஜய் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார் மரிய வில்சன்
- மாபெரும் வெற்றி பெற்று ‘ஜனநாயகனாக’ பேரவையில் அமர்ந்திருக்கும் முதல்வர் விஜய்; சொன்னதை செய்து காட்டியவர் விஜய்; ஊழலற்ற அரசை நடத்துகிறார் விஜய்- மரிய வில்சன்
- மக்கள் புரட்சியை நிகழ்த்தியவர் முதல்வர் விஜய்- மரிய வில்சன்
- முதலமைச்சர் விஜய்க்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் புகழாரம்
- விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மரிய வில்சன்

- வாரிப் பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்ந்து மேல்வருவ செய்வான் பொருள்– திருக்குறளுடன் சட்டசபையை தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் - பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது
- சட்டசபைக்குள் வந்த முதல்வர் விஜய்-க்கு மேஜைகளை தட்டி வரவேற்பளித்த தவெக எம்.எல்.ஏ.க்கள்
- Very Special- தாக்கல் செய்யும் பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் கருத்து
- முதல்வர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நிதி அமைச்சர் மரிய வில்சன்
- திமுக எம்.எல்.ஏ.க்களுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
- நிதி அமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட்டுடன் சட்டசபைக்கு வருகை தந்தார்.
- கடந்த கூட்டத் தொடரில் “வாயை திறந்த சிஎம்” என்ற பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள் தற்போது அரசுக்கு எதிரான பேட்ஜ் அணியாமல் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

- சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்
- காவிரி பிரச்சனை, மின்வெட்டு விவகாரங்களை திமுக எழுப்பக் கூடும்
- அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை- எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை.
- சட்டசபைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வருகை தருகின்றனர்
- பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ5 லட்சம் கடன் உதவி அறிவிப்பு இடம் பெறக் கூடும்.
- அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு.
- 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகலாம்
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ4,000 வழங்கும் அறிவிப்பு இடம் பெற வாய்ப்புள்ளது
- 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் அறிவிப்பு இடம் பெறலாம்
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் என எதிர்பார்ப்பு
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்ட விடுவிக்கப்பட்ட நிலையில் சட்டசபைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை
- முதல்வர் விஜய் அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்கிறார்
