தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நிதி அமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
முக்கிய அம்சங்கள்…
சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு 17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு லட்சம் வேலை இல்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கவும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதல் கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி வழங்கவும், பட்டதாரிகள் மற்றும் தொழில்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கவும் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் எஸ்எஸ் சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளுக்கு கூடுதல் பயிற்சி வகுப்புகள் 3.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.
அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழில் பிரிவு உருவாக்கப்படும். இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலன் பராமரிப்பு பயிற்சிக்கு ஐந்து ஆண்டுகளில் 12,500 பாரம்பரிய மெக்கானிக் உட்பட மொத்தம் 22,500 பேர் பயன்பெறும் வகையிலான திட்டத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
