TN Budget 2026-27: ரூ. 150 கோடியில் வெற்றி திறன் பயிற்சித் திட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் 2026 -27ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தற்போது சட்டப்பேரவையில் வாசித்து வருகிறார். இதில் வெற்றி திறன் பயிற்சி திட்டம், செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெற்றி திறன் பயிற்சித் திட்டத்திற்கு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

12 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 இலட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்

அரசு & தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி வழங்கப்படும்

ADVERTISEMENT

மேலும் பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும்

நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

ADVERTISEMENT

செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சித் திட்டம்

தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டத்தினை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.

வரும் 2031 ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 இலட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

5,000 அரசு பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share