பள்ளிகளில் சூப்பர் க்ளீன் திட்டம் : ரூ.139 கோடி ஒதுக்கீடு!

Published On:

| By Kavi

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட் 5) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடியது.

ADVERTISEMENT

இதில் 2026-2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் மரிய வில்சன் உரையாற்றி வருகிறார்.

ஜனநாயகன், நெஞ்சில் குடியிருக்கும், மக்கள் பணத்தை தொட்டால் விடமாட்டோம் என முதல்வர் கூறும் வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அவர்,

அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share