காமராசர் காலை உணவுத் திட்டத்துக்கு ரூ.710 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
இதற்காக ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் காலை உணவு திட்டம் என்றிருந்த இந்த திட்டத்தின் பெயரை காமராசர் காலை உணவு திட்டம் என இந்த அரசு பெயர் மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
