திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் பரணி தீபம் இன்று (நவம்பர் 26) அதிகாலை ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா புகழ்பெற்றது. பரணி தீபம், மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.

இந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று அதிகாலை 3.40 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், 2,668 உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறுகிறது.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பேருந்து நிலையங்கள், இலவச மினி பஸ், சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
